TNPSC Thervupettagam
February 28 , 2023 509 days 252 0
  • OpenAI நிறுவனத்தின் ChatGPT அறிமுகமாகி ஒரு புரட்சியை ஏற்படுத்தியதையடுத்து, கூகுள் நிறுவனம் BARD எனப்படும் அதன் உரையாடு மென்பொருளினை வெளியிட்ட நிலையில், மேலும் பல நிறுவனங்கள் இதைப் பின்பற்றின.
  • இப்போது, மெட்டா நிறுவனமானது, அதன் மாபெரும் மொழி மாதிரி மெட்டா செயற்கை நுண்ணறிவு மென்பொருளினை (LLaMA) பொது மக்கள் மத்தியில் அறிமுகப் படுத்தியது.
  • LLaMA என்பது செயற்கை நுண்ணறிவு சார்ந்த துறையில் ஆராய்ச்சியாளர்களுக்கு அவர்கள் மேற்கொள்ளும் பணிகளில் உதவுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அதிநவீன அடிப்படை மொழி மாதிரியாகும்.
  • தவறான தகவல்களை வழங்கியதைத் தொடர்ந்து உடனடியாக நிறுத்தப்பட்ட Glactica மற்றும் Blender Bot 3 ஆகியவற்றிற்குப் பிறகு மெட்டா நிறுவனத்தினால் அறிமுகப் படுத்தப் படும் மூன்றாவது மொழி மாதிரி இதுவாகும்.
  • மெட்டாவின் கூற்றுப்படி, LLaMA அடிப்படையில் ஒரு உரையாடு மென்பொருள் அல்ல; இது செயற்கை நுண்ணறிவு மொழி மாதிரிகள் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்கும் ஒரு ஆராய்ச்சிக் கருவியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்