OpenAI நிறுவனத்தின் ChatGPT அறிமுகமாகி ஒரு புரட்சியை ஏற்படுத்தியதையடுத்து, கூகுள் நிறுவனம் BARD எனப்படும் அதன் உரையாடு மென்பொருளினை வெளியிட்ட நிலையில், மேலும் பல நிறுவனங்கள் இதைப் பின்பற்றின.
இப்போது, மெட்டா நிறுவனமானது, அதன் மாபெரும் மொழி மாதிரி மெட்டா செயற்கை நுண்ணறிவு மென்பொருளினை (LLaMA) பொது மக்கள் மத்தியில் அறிமுகப் படுத்தியது.
LLaMA என்பது செயற்கை நுண்ணறிவு சார்ந்த துறையில் ஆராய்ச்சியாளர்களுக்கு அவர்கள் மேற்கொள்ளும் பணிகளில் உதவுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அதிநவீன அடிப்படை மொழி மாதிரியாகும்.
தவறான தகவல்களை வழங்கியதைத் தொடர்ந்து உடனடியாக நிறுத்தப்பட்ட Glactica மற்றும் Blender Bot 3 ஆகியவற்றிற்குப் பிறகு மெட்டா நிறுவனத்தினால் அறிமுகப் படுத்தப் படும் மூன்றாவது மொழி மாதிரி இதுவாகும்.
மெட்டாவின் கூற்றுப்படி, LLaMA அடிப்படையில் ஒரு உரையாடு மென்பொருள் அல்ல; இது செயற்கை நுண்ணறிவு மொழி மாதிரிகள் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்கும் ஒரு ஆராய்ச்சிக் கருவியாகும்.