நாசா அதன் தாழ்மட்ட புவிச் சுற்றுப்பாதையில் இயங்கும் ஒரு மிதவை வகையிலான வேக ஒடுக்கியின் (LOFTID) விமானச் சோதனைப் பணியின் தொழில்நுட்ப விளக்கத்தை நிறைவு செய்தது.
இந்தக் கூம்பு வடிவ அமைப்பானது, இழுவை சக்திகளுக்கு எதிராக அதன் நிலையினைத் தக்க வைத்திருக்கக் கூடியத் திறன் கொண்ட ஒரு மிதவை அமைப்பைக் கொண்டிருக்கும்.
இது விண்கலங்கள் புவியில் மீண்டும் நுழையும் போது உருவாகும் அதிக வெப்பத்தில் இருந்து பாதுகாப்பதற்கான ஒரு பாதுகாப்பு நெகிழ்திறன் மிக்க வெப்பப் பாதுகாப்பு அமைப்பையும் கொண்டிருக்கும்.