TNPSC Thervupettagam
February 26 , 2023 641 days 328 0
  • பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனமானது, தனது LORA என்ற ஆயுத அமைப்பினை உள்நாட்டில் உற்பத்தி செய்து, இந்தியாவின் முப்படைகளுக்கு வழங்கச் செய்வதற்காக இஸ்ரேல் நாட்டின் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (IAI) நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • இந்த அதிநவீன உத்திசார் ஆயுத அமைப்பானது ஆயுதம் BEL நிறுவனத்தினால் தயாரிக்கப் பட உள்ளது.
  • LORA என்பது கடல் பரப்பில் இருந்து நிலப்பரப்பிற்குப் பாயக் கூடிய மற்றும் நிலப் பரப்பிலிருந்து வேறொரு நிலப்பரப்பிற்குப் பாயக்கூடிய வகையில், நீண்ட தொலைவு வரை சென்று தாக்கும் உந்து விசை ஏவுகணை கொண்ட ஆயுத அமைப்பாகும்.
  • இது ஒரு தனித்துவமான ஏவுகணை ஏவல் அமைப்பு, கட்டளை வழங்கீட்டு மூலமான கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் நிலப்பரப்பு/கடல் சார் தொழில்நுட்ப ஆதரவு அமைப்பு ஆகும்.
  • LORA அமைப்பு ஆனது பல தொலைவு வரம்புகளுக்கு 10 மீட்டர் சுற்றளவு பிழையளவு என்ற துல்லிய நிலையுடன் கூடிய உந்துவிசை தாக்குதல் திறன்களை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்