TNPSC Thervupettagam

LPG தொகுப்புகளின் சோதனைத் திட்டம் – தமிழ்நாடு

December 1 , 2024 43 days 125 0
  • மண்ணெண்ணெய்யைப் பெரும்பாலும் பயன்படுத்துகின்ற, படகு வெளிப்புற உந்து விசை இயக்கிகள் (OBM) கொண்ட மீன்பிடி படகுகள் விரைவில் சுற்றுச்சூழலுக்கு நன்கு உகந்ததாக மாற உள்ளது.
  • அவை மண்ணெண்ணெயால் இயங்கும் எஞ்சின்களுக்குப் பதிலாக திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவால் இயங்கும் வெளிப்புற உந்துவிசை இயக்கிகளால் இயங்கும் எஞ்சின்களைப் பெற உள்ளன.
  • திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இதுபோன்ற 150 படகுகளுக்கு LPG தொகுப்புகள் வழங்கப்படும்.
  • மாசுபடுத்தும் மண்ணெண்ணெய்க்கு ஒரு நல்மாற்றாக இந்த எரிபொருளை அறிமுகப் படுத்துவதற்கு இது போன்ற ஒரு சோதனைத் திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
  • மண்ணெண்ணெய் எந்திரங்களில் கார்பன் மோனாக்சைடு உமிழ்வு ஆனது 1.2% ஆக இருந்தது, அதே சமயம் LPG வாயுவினால் 0.32% மட்டுமே வெளியிடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்