‘கௌரவ்’ எனப்படும் தொலை தூர வரம்புடைய தட்டையானப் பாதையில் காற்றைக் கிழித்துச் செல்லக் கூடிய குண்டின் (LRGB) வீச்சு சோதனைகளை இந்தியா மிகவும் வெற்றிகரமாக நடத்தியது.
"கௌரவ்" என்பது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் உள் நாட்டிலேயே நன்கு வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட 1,000 கிலோ ரக காற்றைக் கிழித்துச் செல்ல க்கூடிய குண்டு ஆகும்.
SAAW (திறன் மிகு வான் வெளி எதிர்ப்பு ஆயுதம்) என்று அழைக்கப் படும் இலகுரக காற்றைக் கிழித்துச் செல்லக்கூடிய குண்டு ஆனது ஒடிசாவில் சோதனை செய்யப் பட்டது.
SAAW என்பது 100 கி.மீ வரையிலான தூரத்தில் உள்ள எதிரி நாட்டு விமான நிலையங்கள், ஓடுபாதைகள், பதுங்குக் குழிகள் மற்றும் இன்ன பிற வலுவூட்டப்பட்டக் கட்டமைப்புகளைக் குறி வைத்து தாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஓர் இலகுரகத் துல்லியமாக வழி காட்டப்பட்ட குண்டு ஆகும்.