ஒரு தனியார் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட LSAM 16 (யார்டு 130) தொடரில் தயாரிக்கப் பட்ட ஆறாவது இழுவைப் படகு ஆனது மகாராஷ்டிராவின் தானேயில் இந்தியக் கடற்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதற்கு ‘படைத் தளவாடத்துடன் கூடிய கடற்கணை கொண்ட எறிகணை இழுவைப் படகு, LSAM 20’, என்று பெயரிடப்பட்டுள்ளது.
"படைத் தளவாடங்களைக் கொண்டு செல்லும் கப்பல்" என்பதன் சுருக்கமான LSAM என்பது இந்தியக் கடற்படைக்குத் தேவையான வெடிமருந்துகளைக் கொண்டு செல்வதில் இந்தப் படகு கொண்டுள்ளப் பங்கைக் குறிக்கிறது.