LTCG 2024 பணவீக்கத்தினைக் குறைப்பதற்காக அசல் மதிப்பில் ஈடு செய்தல்
August 4 , 2024 114 days 152 0
மத்திய நிதிநிலை அறிக்கையில் முன்மொழியப்பட்ட புதிய LTCG முறையானது சொத்து, தங்கம் மற்றும் பிற பட்டியலிடப்படாதச் சொத்துகளின் மீது LTCG வரியினை கணக்கிடுவதில் கிடைக்கப் பெறும் அசல் மதிப்பில் ஈடு செய்தல் பலனை ரத்து செய்கிறது.
இது நீண்ட கால மூலதன ஆதாய (LTCG) வரி விகிதத்தை 20 சதவீதத்திலிருந்து 12.5% ஆகக் குறைத்தது.
இது "வரி செலுத்துவோர் மற்றும் வரி நிர்வாகத்திற்கான மூலதனப் பலன்களின் கணக்கீட்டை எளிதாக்குவதற்கானதாகும்".
2001 ஆம் ஆண்டிற்கு முன்னதாக வாங்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் பிற சொத்துக்களுக்கு, 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதியில் உள்ள நியாயமான சந்தை மதிப்பு ஆனது சொத்து வாங்குவதற்கான மதிப்பாகக் கருதப்படும்.
பணவீக்கத்தின் தாக்கத்தை நடுநிலையாக்குவதற்காக வேண்டி ஒரு சொத்து அல்லது முதலீட்டின் அசல் கொள்முதல் விலையில் ஈடு செய்வதற்கான செயல்முறையே, அசல் மதிப்பில் ஈடு செய்தல் முறை ஆகும்.
ஒரு சொத்தை வாங்குவதற்கான செலவினை அது வைத்திருக்கும் காலக் கட்டத்தில் நிலவும் பண வீக்கத்தின் அடிப்படையில் அதிகபட்ச அளவில் திருத்தியமைப்பது இதில் அடங்கும்.