TNPSC Thervupettagam
July 22 , 2023 494 days 266 0
  • ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் (ESA) சியோப்ஷ் செயற்கைக்கோளில் இருந்து பெறப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட அதிக ஒளி பிரதிபலிப்பு கொண்ட கிரகம் ஒன்றை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இந்தக் கிரகமானது பிரதிபலிப்புத் தன்மை கொண்ட உலோக மூலக்கூறுகளால் ஆன மேகங்களின் தடிமன் மிக்க அடுக்கினைக் கொண்டுள்ளது.
  • புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட LTT9779 b எனப்படும் இந்தக் கிரகமானது அது உருவான நட்சத்திரத்திலிருந்துப் பெறும் ஒளியில் 80 சதவீதத்தினைப் பிரதிபலிக்கச் செய்கிறது.
  • வெள்ளிக் கோள் ஆனது சூரியனின் ஒளியில் 75 சதவீதத்தினைப் பிரதிபலிக்கும் மிகத் தடிமனான மேக அடுக்கினைக் கொண்டுள்ளது.
  • பூமியானது உள்வரும் சூரிய ஒளியில் 30 சதவீதத்தினை மட்டுமே பிரதிபலிக்கிறது.
  • இந்தப் புதிய புறக்கோள் ஆனது நெப்டியூனின் அளவிலேயே காணப்படுகிறது.
  • உலோக மூலக்கூறுகள் கொண்ட இந்த மேகங்கள் பெரும்பாலும் சிலிக்கேட் மூலக் கூறுகளால் ஆனவையாகும்.
  • டைட்டானியம் போன்ற மற்ற உலோகங்களும் இந்த மேகங்களில் கலந்துள்ளன.
  • சுடர்மிக்க மற்றும் வெப்பமிகு புறக்கோள் ஆனது அது உருவான நட்சத்திரத்திற்கு மிக அருகில் இருப்பதால் அது ஒரு நாளிற்குள்ளாகவே தனது சுற்றுப்பாதையை நிறைவு செய்கிறது.
  • LTT9779 b கோளின் வளிமண்டலத்தில் சிலிக்கேட் மற்றும் உலோக நீராவிகள் அதிகம் காணப் படுவதால் அதிக வெப்பம் கொண்டதாக இருந்தாலும் உலோக மேகங்களை உருவாக்கக் கூடியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்