நிலவின் துருவ ஆய்வுத் திட்டத்தினை மேற்கொள்வதற்காக (LUPEX) இஸ்ரோ மற்றும் ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆகியவை கைகோர்த்துள்ளன.
இது நிலவின் துருவப் பகுதிகளில் வாழ்வியலுக்கு சாத்தியமான செயல்பாடுகள் மற்றும் நீர்-பனி சார் வளங்கள் உள்ளனவா என்பது குறித்து ஆராய்வதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆய்வுத் திட்டத்தில் ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனம் உருவாக்கிய உலாவிக் கலம் மற்றும் இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட தரையிறங்கு கலம், நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆகியவற்றின் கருவிகள் அடங்கும்.