இஸ்ரோ விண்வெளி நிறுவனமானது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட CE20 மீக்குளிர் நிலையிலான இயந்திரத்தின் எரியூட்டல் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்து உள்ளது.
இது இஸ்ரோவின் மார்க்-III (LVM-III) எநனும் விண் ஏவு கலத்தின் மேல் நிலைக்கு ஆற்றல் அளிக்கும்.
மீக்குளிர் நிலையிலான இந்த இயந்திரங்கள் மிகவும் அதிகளவில் குளிரூட்டப்பட்ட எரி பொருட்களை (திரவ ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன்) பயன்படுத்துவதால் மிகவும் சிக்கலானவை.
மனிதர்களைச் சுமந்து செல்வதற்கு ஏற்றது என மதிப்பிடப்பட்ட LVM-III வடிவமானது சுற்றுப்பாதையில் இருந்தபடி எரியூட்டல் செயல்முறை தேவைப்படுகின்ற ககன்யான் திட்டத்தில் பயன்படுத்தப்படும்.