ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக் கோள்களை சுமந்துச் செல்லும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிக எடையைச் சுமந்துச் செல்லக் கூடிய விண்கலமான LVM3 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.
36 செயற்கைக் கோள்களின் முதல் தொகுப்பு ஆனது LVM3-M2/ஒன்வெப் இந்தியா-1 திட்டம் மூலமாக 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதியன்று விண்ணில் ஏவப் பட்டது.
இது LVM3 விண்கலத்தின் ஆறாவது விண்பயணமாகும்.
LVM3 விண்கலமானது சந்திரயான்-2 திட்டம் உட்பட ஐந்து தொடர் வெற்றிகரமான விண்வெளிப் பயணங்களை மேற்கொண்டுள்ளது.