TNPSC Thervupettagam
July 21 , 2023 368 days 195 0
  • மத்திய வேதிப் பொருட்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சகமானது, உற்பத்தி ஆலைகளில் இடர்தொடர்பான ஆய்வுகள் மற்றும் தணிக்கைகளை மேற்கொள்ளச் செய்யுமாறு ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
  • குறு, சிறு மற்றும் நடுத்தர மருந்து உற்பத்தித் தொழில்துறை நிறுவனங்களுக்கு M அட்டவணை கட்டாயமாக்கப்படும் என்றும் அது கூறியுள்ளது.
  • M அட்டவணை என்பது மருந்துகளின் ‘முறையான உற்பத்தி நடைமுறைகள்’ தொடர்பான 1940 ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • இது தர உத்தரவாதத்தினை வலுப்படுத்துவதையும், ஓர் உலகளாவிய மருந்து உற்பத்தி மையமாக விளங்கும் இந்தியாவின் நன்மதிப்பினைப் பாதுகாப்பதையும் ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உற்பத்தி ஆலைகள், தரக்கட்டுப்பாட்டு அமைப்புகள், ஆய்வகங்கள், உற்பத்தி, உபகரணங்களைச் சுத்தம் செய்தல் மற்றும் ஆலைத் தூய்மைப் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இது உள்ளடக்கியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்