மத்திய அமைச்சரவையானது, பிரதான் மந்திரி கிருஷி சிஞ்சாயி யோஜனா (PMKSY) என்ற திட்டத்தின் ஒரு துணைத் திட்டமாக 'கட்டுப்பாட்டுப் பகுதி மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மையை நவீனமயமாக்குதல் (M-CADWM)' திட்டத்தினை அங்கீகரித்துள்ளது.
1,600 கோடி ரூபாய் ஆரம்ப ஒதுக்கீட்டுடன் தொடங்கப் படும் இந்த முன்னெடுப்பானது, 2025-2026 ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இது இந்தியாவில் நீர்ப்பாசன உள்கட்டமைப்பைக் கணிசமாக மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.