M-STRIPES [Monitoring System for Tigers Intensive Protection and Ecological Status] என்பது இந்திய வனவிலங்குகள் நிறுவனத்தினால் [WII – Wildlife Institute of India] உருவாக்கப்பட்ட ஓர் செயலி ஆகும்.
இந்த செயலி முதல் முறையாக அனைத்திந்திய புலிகள் கணக்கெடுப்பில் (All India Tiger Estimation) பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த செயலி ஏற்கெனவே சில தேசியப் பூங்காக்களில் பயன்பாட்டில் உள்ள போதிலும், தற்போது மேற்கொள்ளப்படவுள்ள நான்காவது அனைத்திந்திய புலிகள் கணக்கெடுப்பில் மட்டுமே இவற்றின் பயன்பாடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புலிகள் கணக்கெடுப்பின் போது மனிதர்களால் ஏற்படும் பிழைகளை தவிர்த்து சரியான கணக்கெடுப்பை மேற்கொள்ள இந்த செயலி உதவும்.