TNPSC Thervupettagam

M3 பதிப்பு EVM கருவிகள்

April 15 , 2019 1925 days 498 0
  • தெலுங்கானாவின் நிசாமாபாத் தொகுதியில் போட்டியிட்ட 185 வேட்பாளர்களுக்கும் இடமளிக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையமானது M3 பதிப்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தியது.
  • மேலும் தேர்தல் அதிகாரிகள் ஒரே தொகுதியில் அதிகபட்சமான வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தியதை அங்கீகரிக்க கின்னஸ் சாதனைப் புத்தகத்தினையும் அணுகியுள்ளனர்.
  • 1778 வாக்குச் சாவடிகளிலும் 12 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு அவை ஒவ்வொரு தேர்தல் மையத்திலும் உள்ள கட்டுப்பாட்டு அலகுடன் இணைக்கப்பட்டன.
  • நாட்டில் அதிகபட்சமான வேட்பாளர்களைக் (185) கொண்ட வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் வாக்குப்பதிவு நடத்திய முதல் தொகுதியாக இது அமைந்தது.
M3 பதிப்பு EVM
  • இந்தப் புதிய M3 பதிப்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களானது 2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு வெளிவந்தன. இது NOTA உட்பட 384 வேட்பாளர்களை உள்ளிடும் அளவிற்கு அதிகபட்ச திறனைக் கொண்டது.
  • மேலும் இது தலையீடுகளைக் கண்டறிதல் மற்றும் சுய பிழையறிதல் சோதனை போன்ற கூடுதல் அம்சங்களைக் கொண்டது.
  • இது இந்திய மின்னணுவியல் நிறுவனம் மற்றும் பாரத் மின்னணுவியல் நிறுவனம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்