ராஜஸ்தானில் உள்ள பொக்ரான் சுடுதல் சோதனை வரம்பில் இந்திய மற்றும் அமெரிக்க இராணுவ அதிகாரிகள்M777 அதிநவீன இலகுரக ஹௌவிட்சர் என்ற பீரங்கித் துப்பாக்கிகளை (M777 Ultra-light Howitzer) சோதனை செய்துள்ளனர்.
.
2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவின்BAE நிறுவனத்திடமிருந்து இரு M777 துப்பாக்கிகளை இந்திய இராணுவம் பெற்றது.
இருப்பினும்செப்டம்பர் 2017-ல் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இவற்றில் ஏற்பட்ட பழுது மற்றும் விபத்தின் காரணமாக தற்போது மீண்டும் சோதனை செய்யப்பட்டுள்ளது.
M777 அதிநவீன இலகுரக ஹௌவிட்சர் பீரங்கி துப்பாக்கிகளை அமெரிக்காவின்BAE நிறுவனத்தின் போர் அமைப்புப் பிரிவு (Combat system division) தயாரித்துள்ளது.
இந்திய இராணுவமானது இத்தகு பீரங்கித் துப்பாக்கிகளை சீன எல்லையில் அமைந்துள்ள அருணாச்சலப் பிரதேசம் மற்றும் லடாக்கில் அமைக்க உள்ளது.