TNPSC Thervupettagam

M777-அதி நவீன இலகு ரக ஹௌவிட்சர் துப்பாக்கி

March 8 , 2018 2327 days 671 0
  • ராஜஸ்தானில் உள்ள பொக்ரான் சுடுதல் சோதனை வரம்பில் இந்திய மற்றும் அமெரிக்க இராணுவ அதிகாரிகள்M777 அதிநவீன இலகுரக ஹௌவிட்சர் என்ற பீரங்கித் துப்பாக்கிகளை   (M777 Ultra-light Howitzer)    சோதனை செய்துள்ளனர்.
.
  • 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவின்BAE நிறுவனத்திடமிருந்து இரு M777 துப்பாக்கிகளை இந்திய இராணுவம் பெற்றது.
  • இருப்பினும்செப்டம்பர் 2017-ல் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இவற்றில் ஏற்பட்ட பழுது மற்றும் விபத்தின் காரணமாக தற்போது மீண்டும் சோதனை செய்யப்பட்டுள்ளது.
  • M777 அதிநவீன இலகுரக ஹௌவிட்சர் பீரங்கி துப்பாக்கிகளை அமெரிக்காவின்BAE நிறுவனத்தின் போர் அமைப்புப் பிரிவு (Combat system division) தயாரித்துள்ளது.
  • இந்திய இராணுவமானது இத்தகு பீரங்கித் துப்பாக்கிகளை சீன எல்லையில் அமைந்துள்ள அருணாச்சலப் பிரதேசம் மற்றும் லடாக்கில் அமைக்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்