இந்தியா, லடாக்கின் ஹான்லேயில் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவின் மிகப்பெரிய வரைபடமாக்க செரென்கோவ் தொலைநோக்கியை திறந்து வைத்துள்ளது.
இது சுமார் 4,300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
முக்கிய வளிமண்டல செரென்கோவ் சோதனை (MACE) தொலைநோக்கி உலகின் மிக உயரமான தொலைநோக்கி ஆகும்.
வளிமண்டலம் ஆனது காமா கதிர்களை உறிஞ்சுவதால் அவை பூமியின் மேற்பரப்பை அடையாது.
இருப்பினும், அவை வளிமண்டலத்தில் ஒளியை விட வேகமாகப் பயணிப்பதால், ஒலி முழக்கம் (sonic boom) போன்ற செரென்கோவ் கதிர்வீச்சை வெளியிடும் உயர் ஆற்றல் துகள்களை உருவாக்குகின்றன.
MACE தொலைநோக்கியின் கண்ணாடிகள் மற்றும் ஒளிப்படக் கருவிகள் இந்தக் கதிர்வீச்சைப் பற்றிக் கொள்கின்றன என்பத்டு பின்னர் அது மீண்டும் அதன் அண்ட மூலத்திற்குத் திரும்புகிறது.