TNPSC Thervupettagam
October 14 , 2024 40 days 141 0
  • இந்தியா, லடாக்கின் ஹான்லேயில் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவின் மிகப்பெரிய வரைபடமாக்க செரென்கோவ் தொலைநோக்கியை திறந்து வைத்துள்ளது.
  • இது சுமார் 4,300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
  • முக்கிய வளிமண்டல செரென்கோவ் சோதனை (MACE) தொலைநோக்கி உலகின் மிக உயரமான தொலைநோக்கி ஆகும்.
  • வளிமண்டலம் ஆனது காமா கதிர்களை உறிஞ்சுவதால் அவை பூமியின் மேற்பரப்பை அடையாது.
  • இருப்பினும், அவை வளிமண்டலத்தில் ஒளியை விட வேகமாகப் பயணிப்பதால், ஒலி முழக்கம் (sonic boom) போன்ற செரென்கோவ் கதிர்வீச்சை வெளியிடும் உயர் ஆற்றல் துகள்களை உருவாக்குகின்றன.
  • MACE தொலைநோக்கியின் கண்ணாடிகள் மற்றும் ஒளிப்படக் கருவிகள் இந்தக் கதிர்வீச்சைப் பற்றிக் கொள்கின்றன என்பத்டு பின்னர் அது மீண்டும் அதன் அண்ட மூலத்திற்குத் திரும்புகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்