TNPSC Thervupettagam

MAHASAGAR முன்னெடுப்பு

December 3 , 2023 231 days 283 0
  • இது இந்தியக் கடற்படையினால் மேற்கொள்ளப்பட்ட இந்தியப் பெருங்கடல் பகுதியில் (IOR) செயல் திறன் மிக்க பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உயர்நிலை மெய்நிகர் தொடர்பு அமைப்பு ஆகும்.
  • இது MAHASAGAR என்பது இந்தியப் பெருங்கடல் பகுதியில் அனைவருக்குமான செயல் திறன் மிக்கப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான கடல்சார் தலைமைகள் என்று பொருள்படும்.
  • இது வங்காளதேசம், கொமொரோஸ், கென்யா, மடகாஸ்கர், மாலத்தீவுகள், மொரிஷியஸ், மொசாம்பிக், செய்செல்ஸ், இலங்கை மற்றும் தான்சானியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் ஈடுபட்டுள்ளது.
  • “பரந்த கடல்” என்று பொருள்படும் MAHASAGAR, இந்தியக் கடற்படையின் பாதுகாப்பு விரிவாக்க முன்னெடுப்பின் சாராம்சத்தைக் கொண்டுள்ளது.
  • பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பிற்கான ஒரு தளமாகச் செயல்படுகின்ற இது இந்திய அரசாங்கத்தின் SAGAR திட்டத்தின்‘ பிராந்தியத்தில் உள்ள அனைவருக்குமான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி’ – என்ற தொலைநோக்கத்தின் ஒரு உறுதிப்பாட்டினைப் பிரதிபலிக்கிறது .
  • இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்துரு, “பொதுவான சவால்களை எதிர் கொள்ளச் செய்வதற்கான கூட்டு கடல்சார் அணுகுமுறை” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்