குஜராத் மாநிலத்தின் டாங் மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அஹ்வா வனங்களில் (Ahwa forests) Malvi’s adder’s - tongue fern (Ophioglossum malviae) எனும் உலகின் மிகச் சிறிய நிலப் பெரணியை (land fern) ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பெரணி தாவரங்களானது பருவகால தாவரங்களாகும் (seasonal). இவை பெரும்பாலும் முதல் பருவ மழைகளின் போது வளருபவை.
விரலின் நகம் அளவிலான இந்த உலகின் மிகச் சிறிய பெரணியானது adders - tongue fern எனும் குழுவைச் சேர்ந்தது.
பாம்புகளின் நாக்கினைப் போலான தோற்றத்தை உடையதால் இந்த குழுவிற்கு adder’s tongue fern எனப் பெயரிடப்பட்டுள்ளது.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பெரணியானது ஒரு செமீ அளவுடையது ஆகும்.