இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள், ஒரு வார கால கூட்டு இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளன.
2023 ஆம் ஆண்டு CARAT/MAREX இலங்கைப் பயிற்சியானது, இத்தகைய ஐந்தாவது இரு தரப்புப் பயிற்சியாகும்.
உத்திசார்ந்த முக்கியத்துவம் வாய்ந்தப் பிராந்தியத்தில் சீனாவின் அதிகரித்து வரும் இராணுவச் சூழ்ச்சிகளுக்கு மத்தியில், பேரழிவுகளுக்கான நிவாரணத்திற்குத் தயார் படுத்துதல் மற்றும் சுதந்திரமான மற்றும் தடையற்ற இந்தோ-பசிபிக் பகுதியினை நிலவச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தப் பயிற்சிக்கு, கடல்சார் ஒத்துழைப்பு தயார்நிலை மற்றும் பயிற்சி (CARAT)/ இலங்கை கடல்சார் பயிற்சி (MAREX) 2023 என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சியில் இலங்கைக் கடற்படை, இலங்கை விமானப்படை, ஜப்பான் கடல் சார் தற்காப்புப் படை மற்றும் மாலத்தீவு தேசியப் பாதுகாப்புப் படை ஆகியவை இதில் பங்கேற்க உள்ளன.