முன்னதாக, NAFLD (ஆல்கஹால் பயன்பாடு சாராத கொழுப்பு மிகுந்த கல்லீரல் நோய்) என்ற சொல் ஆனது MASLD (வளர்சிதை மாற்றம் சார்ந்தச் செயலிழப்புடன் தொடர்பு உடைய கொழுப்பு மிகுந்த கல்லீரல் நோய்) என மறுபெயரிடப்பட்டது.
இந்தப் புதிய பெயர் ஆனது, கொழுப்பு மிகுந்த கல்லீரல் நோய் மற்றும் உடல் பருமன், இரண்டாம் வகை நீரிழிவு நோய், மற்றும் அசாதாரணமான கொழுப்பு/கொலஸ்ட்ரால் அளவுகள் போன்ற வளர்சிதை மாற்றப் பிரச்சனைகளுக்கு இடையே உள்ள தொடர்பை எடுத்துக்காட்டுகிறது.
MASLD ஆனது உலகளவில் சுமார் 25 சதவீத அளவு மக்களைப் பாதிக்கிறது என்பதோடு இரண்டாம் வகை நீரிழிவு நோய் அல்லது உடல் பருமன் உள்ளவர்களில் இந்தப் பாதிப்பு விகிதம் 50-70 சதவீதமாக உள்ளது.