தேசியக் கடல்சார் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது, மூன்று நபர்களை கடலின் 6000 மீட்டர் ஆழத்திற்கு அனுப்புவதற்கான ‘சமுத்ராயன்’ என்ற திட்டத்தின் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இது ஆழ்கடல் ஆய்விற்காக ‘மத்ஸ்யா 6000’ என்ற வாகனத்தைப் பயன்படுத்த உள்ளது.
இந்தியாவின் இந்த உள்நாட்டுப் பணியானது, இந்த அளவு ஆழத்திற்கு மனிதர்களை கொண்டுச் செல்லும் நீர்மூழ்கிக் கப்பல்களை வெற்றிகரமாகச் சோதனை செய்த ஐந்து நாடுகளின் குழுவினுள் இந்தியா இணைவதற்கு வழி வகுக்கும்.
நிக்கல், மாங்கனீசு, கோபால்ட் மற்றும் பிற அருமண் தனிமங்கள் நிறைந்த ஆழ்கடல் கனிம வளங்களை ஆய்வு செய்வதில் அறிவியல் பணியாளர்களுக்கு ‘மத்ஸ்யா 6000’ உதவும்.