TNPSC Thervupettagam

M.A.ஈஸ்வரன் - சுதந்திரப் போராட்ட வீரர்

September 10 , 2024 73 days 104 0
  • கீழ் பவானி திட்டத்தைக் கொண்டு வருவதில் அப்போதைய ஈரோடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த M.A.ஈஸ்வரன் முக்கியப் பங்காற்றினார்.
  • சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட முதல் பெரிய நீர்ப்பாசனத் திட்டம் இதுவாகும்.
  • இது நெல் மற்றும் பிற பயிர்கள் சாகுபடிக்காக 2,47,247 ஏக்கர் நிலப்பரப்பிற்கு பாசனம் வழங்கி ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களை வளமான நிலப்பரப்பாக மாற்றியது.
  • மேலும், இரண்டு மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 18 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
  • ஈஸ்வரன் M.K.காந்தி அவர்களின் நெருங்கிய கூட்டாளி ஆவார்.
  • மதராஸ் மாகாணத்தின் பிரதமர் பதவிக்கு தங்குதூரி பிரகாசம் அளித்த வேட்பு மனுவிற்கு ஆதரவளித்தார்.
  • எனவே, உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் 1952 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அவரை முன்னிறுத்தவில்லை.
  • ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் முதலமைச்சரானார், அதைத் தொடர்ந்து C.இராஜ கோபாலாச்சாரி மற்றும் K.காமராஜ் ஆகியோர் 1955 ஆம் ஆண்டில் இந்தப் பாசனக் கால்வாயைத் திறந்து வைத்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்