மும்பையில் மசாகன் கப்பல் கட்டும் நிறுவனமானது (MDL) தனது 250வது ஆண்டு நிறைவு விழாவினைக் கொண்டாடியது.
இந்த நிகழ்வின் போது, அது 'அரோவானா' என்று பெயரிடப்பட்ட உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்ட சிறிய நீர்மூழ்கிக் கப்பலின் முன்மாதிரியை அறிமுகம் செய்தது மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் மின்சாரக் கலப்புப் படகினையும் இயக்கி அதைச் சோதித்தது.
இந்த நிறுவனம் 1774 ஆம் ஆண்டில் ஒரு சிறிய உலர் கப்பல்துறையாகத் தொடங்கப் பட்டது.
1960 ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கம் ஆனது தனது போர்க்கப்பல் மேம்பாட்டுத் திட்டத்தினை மேலும் மேம்படுத்துவதற்காக இந்தத் துறையினை அரசின் பொறுப்பில் எடுத்து பொதுத்துறை நிறுவனமாக மாற்றியது.