உலக சுகாதார அமைப்பானது, 2301 வகையான மருத்துவச் சாதனங்கள் பற்றியத் தகவல்களை வழங்கும் ஒரு தடையற்ற அணுகல் வசதி கொண்ட MeDevIS என்ற தரவுத் தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
சாதனத்தின் பெயரிடலை எளிதாக்குதல் மற்றும் பாரம்பரியக் காகித அடிப்படையில் அமைந்தத் தேடல்களை மாற்றுதல் ஆகியவற்றினை வழங்கும் ஒரு ஒருங்கிணைந்தத் தளத்தை வழங்கச் செய்வதன் மூலம் அரசாங்கங்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் பயனர்களுக்குத் தகவலறிந்த முடிவுகளை எடுப்பதில் உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
கூடுதலாக, இது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்குப் பயன்படுத்தப்படும் 2301 வகையான மருத்துவச் சாதனங்களை உள்ளடக்கியது.
இனப்பெருக்க ஆரோக்கியம், தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியம், புற்றுநோய், இதயப் பிரச்சனைகள், நீரிழிவு நோய் போன்ற நோய்கள் மற்றும் COVID-19 போன்ற தொற்று நோய்கள் ஆகியவை இதில் அடங்கும்.