சர்வதேச வானியலாளர்கள் குழுவானது, அண்டவியல் பரிணாம ஆய்வுத் துறையில் மாபெரும் வானொலி அண்டங்களை ஆய்வு செய்வதற்காக வேண்டி MeerKAT ரேடியோ தொலைநோக்கியைப் பயன்படுத்தியுள்ளது.
இது வரை பதிவு செய்யப்படாத புதிய இராட்சத அளவிலான ரேடியோ அண்டங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
MeerKAT ஆனது தென்னாப்பிரிக்காவின் வடக்கு கேப் மாகாணத்தில் அமைக்கப் பட்டு உள்ளது மற்றும் 64 ஏற்பிகளைக் கொண்டுள்ளது.
இது சதுர கிலோமீட்டர் தொகுப்பு ஆய்வகத் திட்டத்தில் (SKA) தென்னாப்பிரிக்காவின் பங்களிப்பின் ஒரு பகுதியாகும்.