TNPSC Thervupettagam

MeitY அமைச்சகத்தின் புதிய முன்னெடுப்புகள்

March 11 , 2025 41 days 82 0
  • மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகமானது, இந்தியாAI திட்டத்தின் கீழ் செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் முன்னெடுப்புகளின் தொடரை வெளியிட்டுள்ளது.
  • இது செயற்கை நுண்ணறிவுக் கண்டுபிடிப்புகளை செயல்படுத்துவதற்காக என தரவுத் தொகுப்புகள், மாதிரிகள் மற்றும் வழக்காய்வு நிகழ்வுகளின் ஒரு களஞ்சியத்தினை வழங்குகின்ற AIKosha எனப்படும் பாதுகாப்பான தளத்தினை அறிமுகப்படுத்துகிறது.
  • இது கருவிகள் மற்றும் பயிற்சிகளுடன் ஒருங்கிணைந்த மேம்பாட்டுச் சூழல் மூலம் ஒரு செயற்கை நுண்ணறிவு ஒழுங்குமுறை வகை கட்டமைப்புத் திறன்களையும் கொண்டு உள்ளது.
  • செயற்கை நுண்ணறிவு கணக்கிடுதல் தளமும் சமீபத்தில் தொடங்கப்பட்டது.
  • இந்தத் தளமானது, வணிகங்கள் மற்றும் நிரலாக்க வல்லுநர்களுக்கு வலையமைப்பு மற்றும் சேமிப்பிற்கான வசதிகளுடன் மலிவு விலையிலான செயற்கை நுண்ணறிவு செயலாக்கம் மற்றும் அனுமானத் திறன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்