TNPSC Thervupettagam

Men5CV மூளைக்காய்ச்சல் தடுப்பூசி – நைஜீரியா

April 20 , 2024 218 days 269 0
  • மூளைக்காய்ச்சலுக்கு எதிராக "மாற்றம் மிக்க" புதிய Men5CV தடுப்பூசியை அறிமுகப் படுத்திய உலகின் முதல் நாடாக நைஜீரியா மாறியுள்ளது.
  • கடந்த ஆண்டு, மூளைக் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளாகக் குறிப்பிடப் பட்டுள்ள 26 ஆப்பிரிக்க நாடுகளில் பதிவான வருடாந்திர நோய்ப் பாதிப்புகளில் 50% அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
  • மூளைக் காய்ச்சல் என்பது மூளை மற்றும் தண்டு வடத்தைச் சுற்றியுள்ள சவ்வுகளின் (மெனிஞ்ச்ஸ்) வீக்கத்தால் ஏற்படும் உயிருக்கு ஆபத்தினை விளைவிக்கும் நோயாகும்.
  • மூளைக்காய்ச்சல் ஏற்படுவதற்கு வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணி நோய்க் கிருமிகள் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன.
  • பாக்டீரியாவினால் ஏற்படும் கடுமையான மூளைக் காய்ச்சலுக்கு நான்கு முக்கிய காரணங்கள் உள்ளன:
    • நைசீரிய மூளைக்காய்ச்சல் (மெனிங்கோகோகஸ்)
    • ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியா (நிமோகோகஸ்)
    • ஹீமோபிலஸ் காய்ச்சல்
    • ஸ்ட்ரெப்டோகாக்கஸ் அகலாக்டியே (B குழுவினைச் சேர்ந்த ஸ்ட்ரெப்டோகாக்கஸ்).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்