MERCOSUR அமைப்பில் பொலிவியா
August 5 , 2024
110 days
168
- பொலிவிய நாடானது சமீபத்தில் MERCOSUR அமைப்பில் முழு உறுப்பினராக ஆனது.
- தெற்கத்தியப் பொதுச் சந்தை அமைப்பானது பொதுவாக ஸ்பானிய மொழியில் MERCOSUR என்றும், போர்த்துகீசிய MERCOSUL என்றும் அறியப்படுகிறது.
- இந்த தென் அமெரிக்க வர்த்தக அமைப்பானது 1991 ஆம் ஆண்டு அசுன்சியன் உடன்படிக்கை மற்றும் 1994 ஆம் ஆண்டு அவுரோ பிரிட்டோ நெறிமுறை ஆகியவற்றால் நிறுவப்பட்டது.
- அர்ஜென்டினா, பிரேசில், பராகுவே மற்றும் உருகுவே ஆகியவை இதன் முழு உறுப்பினர்களாகும்.
- இதில் வெனிசுலா முழு உறுப்பினராக உள்ளது ஆனால் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 01 ஆம் தேதி உறுப்பினர் அந்தஸ்திலிருந்து இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளது.
- சிலி, கொலம்பியா, ஈக்வடார், கயானா, பெரு மற்றும் சுரினாம் ஆகியவை இதன் இணை உறுப்பினர் ஆக உள்ள நாடுகள் ஆகும்.
Post Views:
168