இந்தியப் பழங்குடியினக் கூட்டுறவுச் சந்தையிடல் வளர்ச்சிக் கூட்டமைப்பானது காடுகளின் சிறு உற்பத்திப் பொருட்கள் (MFP - Minor Forest Produce) திட்டத்திற்கான “குறைந்தபட்ச ஆதார விலையின்” (MSP - Minimum Support Price) கீழ் உள்ள நிதியிலிருந்து கொள்முதலைத் தொடங்குமாறு மாநில அரசின் அனுமதித் துறைகள் மற்றும் செயல்படுத்தும் நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
2013 ஆம் ஆண்டில் மத்திய அமைச்சரவையானது தேசியமயமாக்கப் படாத/ முற்றுரிமையாக்கப் படாத MFPயின் சந்தையிடல் மற்றும் MSPயின் மூலம் மதிப்புக் கூட்டுத் தொடரை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக மத்திய அரசினால் ஆதரவு அளிக்கப்படும் ஒரு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது.
மரங்கள் அல்லாத வன உற்பத்திப் பொருள் (NTFP – Non Timber Forest Produce) என்றும் அழைக்கப்படும் MFP ஆனது பழங்குடியின மக்களுக்கான வாழ்வாதாரத்தின் ஒரு முக்கிய ஆதாரமாக விளங்குகின்றது. இது காடுகள் மற்றும் காடுகளைச் சுற்றி வாழும் அதிக எண்ணிக்கையிலான பழங்குடியின மக்களுக்கு தேவையான உணவு, ஊட்டச் சத்து, மருத்துவத் தேவைகள் மற்றும் வருமானம் ஆகியவற்றை வழங்குகின்றது.