TNPSC Thervupettagam

MGNREGA திட்ட வேலைவாய்ப்பு அட்டைகள் ரத்து

July 28 , 2023 360 days 208 0
  • 2022-23 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் (MGNREGA) கீழ் ஐந்து கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்பு அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
  • இது 2021-22 ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்ட எண்ணிக்கையை விட 247 சதவீதம் அதிகமாகும்.
  • 2021-22 ஆம் ஆண்டில் 1,49,51,247 MGNREGA வேலைவாய்ப்பு அட்டைகள் ரத்து செய்யப் பட்டன.
  • 2022-23 ஆம் ஆண்டில் 5,18,91,168 வேலைவாய்ப்பு அட்டைகள் ரத்து செய்யப்பட்டன.
  • மேற்கு வங்காளம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான ரத்துகள் செய்யப்பட்டுள்ளன.
  • “போலியான” வேலைவாய்ப்பு அட்டைகள், நகல் வேலைவாய்ப்பு அட்டைகள், இனி இதில் வேலை செய்ய விரும்பாதவர்கள், குடும்பங்கள் கிராமப் பஞ்சாயத்தில் இருந்து நிரந்தரமாக இடமாற்றம் செய்யப் படுதல் அல்லது ஒருவரின் மரணம் போன்ற பல காரணங்களால் இந்த ரத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்