TNPSC Thervupettagam

MGNREGS தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்

January 12 , 2023 556 days 368 0
  • கேரளா மாநில அரசானது இந்தியாவிலேயே முதன்முறையாக, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGS) மற்றும் கேரளா மாநிலத்தின் நகர்ப்புற வேலை வாய்ப்பு உறுதித் திட்டமான அய்யன்காளி நகர்ப்புற வேலை உறுதித் திட்டம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்காக ஒரு நல நிதி வாரியத்தைத் தொடங்கியுள்ளது.
  • இந்த நலநிதி வாரியத்தில் ஒரு தலைமை நிர்வாக அதிகாரி, ஐந்து அதிகாரப்பூர்வ உறுப்பினர்கள் மற்றும் எட்டு அதிகாரப் பூர்வமற்ற உறுப்பினர்கள் ஆகியோர் இந்த நல நிதி வாரியத்தின் இயக்குநர்களாக பணியாற்றுவர்.
  • இது தொழிலாளர்கள் தனது 60 வயதை எட்டும்போது இந்த வாரியத்திடமிருந்து மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு வழிவகை செய்யும்.
  • ஒரு மாநில அரசானது, MGNREGS தொழிலாளர்களுக்காக ஒரு நல நிதி வாரியத்தை உருவாக்குவது இதுவே முதல் முறையாகும்.
  • 2021 ஆம் ஆண்டில், அம்மாநிலச் சட்டமன்றமானது இதற்கான வாரியம் அமைப்பது தொடர்பான மசோதாவினை நிறைவேற்றியது.
  • 18 வயது முதல் 55 வயது வரை உள்ள எந்த ஒரு தொழிலாளியும் இந்த நிதி வாரியத்தில் உறுப்பினராகலாம்.
  • அவர்கள் 55 வயது அடையும் வரை, ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை தவணையாக (தற்காலிகமாக ரூ.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது) செலுத்த வேண்டும்.
  • குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தனது பங்களிப்பைச் செலுத்திய நிலையில் உறுப்பினர் ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்