TNPSC Thervupettagam

MGNREGS திட்டத்திற்கு ஆதார் அடிப்படையிலான ஊதிய வழங்கீட்டு முறை

January 6 , 2024 196 days 188 0
  • இது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பணி புரியும் தொழிலாளர்களுக்கான ஊதியங்களை அவர்களது 12 இலக்க ஆதார் எண்ணை அவர்களது நிதியியல் முகவரியாக பயன்படுத்திச் செலுத்தப் படும் ஒரு முறையாகும்.
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MGNREGS) ஆதார் அடிப்படையிலான ஊதிய வழங்கீட்டு முறையிலிருந்துத் தொழிலாளர்கள் ஒரு குறிப்பிட்ட அமைப்பின் அடிப்படையில் மட்டுமே விலக்கு பெறுவார்கள்.
  • பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களில் 34.8% மற்றும் தற்போது அத்திட்டத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள (பணிபுரிந்து வரும்) தொழிலாளர்களில் 12.7% பேர் இந்த கட்டாயக் கட்டண முறைக்குத் தகுதியற்றவர்களாகவே உள்ளனர்.
  • இதில் பதிவு செய்யப்பட்ட வேலைவாய்ப்பு அட்டைகளின் மொத்த எண்ணிக்கை 14.32 கோடியாகும் என்பதோடு இதில் 9.77 கோடி (68.22%) மட்டுமே அந்தத் திட்டத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள வேலைவாய்ப்பு அட்டைகள் ஆகும்.
  • மொத்தம் 25.25 கோடி பணியாளர்கள் உள்ள நிலையில் அவர்களில் வெறும் 14.32 கோடி (56.83%) பேர் அத்திட்டத்தின் கீழ் தற்போது பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் ஆவர்.
  • 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இன்று வரையில், மாநிலங்களின் உரிய நடைமுறையைப் பின்பற்றி சுமார் 2.85 கோடி வேலைவாய்ப்பு அட்டைகள் ரத்து செய்யப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்