TNPSC Thervupettagam

MIDH திட்டத்தின் விரிவாக்கம்

November 6 , 2024 23 days 147 0
  • மத்திய அரசானது ஒருங்கிணைந்தத் தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (MIDH) மண்ணில்லா வேளாண்மை, மீன்வளர்ப்புடன் கூடிய வேளாண்மை, பல் அடுக்கு செங்குத்து வேளாண்மை மற்றும் துல்லிய வேளாண்மை ஆகிய நான்கு புதிய வகை கூறுகளை சேர்க்க முடிவு செய்துள்ளது.
  • MIDH ஆனது மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டம் ஆகும்.
  • இது பழங்கள், காய்கறிகள், வேர் மற்றும் கிழங்குப் பயிர்கள், காளான்கள், மசாலாப் பொருட்கள், பூக்கள், நறுமணத் தாவரங்கள், தேங்காய், முந்திரி, கொக்கோ மற்றும் மூங்கில் சாகுபடியை ஊக்குவிக்கிறது.
  • 2010-11 ஆம் ஆண்டில் சுமார் 240.53 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த இந்தியாவின் மொத்தத் தோட்டக் கலை உற்பத்தியானது 2020-21 ஆம் ஆண்டில் சுமார் 334.60 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.
  • உலகில் பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • MIDH திட்டத்தின் வருடாந்திர நிதி ஒதுக்கீடு ஆனது நடப்பு நிதியாண்டில் (2024-25) 2,000 கோடி ரூபாய் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்