மத்திய அரசானது ஒருங்கிணைந்தத் தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (MIDH) மண்ணில்லா வேளாண்மை, மீன்வளர்ப்புடன் கூடிய வேளாண்மை, பல் அடுக்கு செங்குத்து வேளாண்மை மற்றும் துல்லிய வேளாண்மை ஆகிய நான்கு புதிய வகை கூறுகளை சேர்க்க முடிவு செய்துள்ளது.
MIDH ஆனது மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டம் ஆகும்.
இது பழங்கள், காய்கறிகள், வேர் மற்றும் கிழங்குப் பயிர்கள், காளான்கள், மசாலாப் பொருட்கள், பூக்கள், நறுமணத் தாவரங்கள், தேங்காய், முந்திரி, கொக்கோ மற்றும் மூங்கில் சாகுபடியை ஊக்குவிக்கிறது.
2010-11 ஆம் ஆண்டில் சுமார் 240.53 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த இந்தியாவின் மொத்தத் தோட்டக் கலை உற்பத்தியானது 2020-21 ஆம் ஆண்டில் சுமார் 334.60 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.
உலகில் பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
MIDH திட்டத்தின் வருடாந்திர நிதி ஒதுக்கீடு ஆனது நடப்பு நிதியாண்டில் (2024-25) 2,000 கோடி ரூபாய் ஆகும்.