TNPSC Thervupettagam

MiG-21 போர் விமானத்தைத் தனியாக இயக்கிய முதல் பெண் விமானி

February 23 , 2018 2340 days 654 0
  • அவனி சதுர்வேதி எனும் பெண் விமானி இந்திய விமானப் படைக்குச் (Indian Airforce - IAF) சொந்தமான “மிக்-21“ பைசர் ரக போர் விமானத்தை தனியாக இயக்கிய முதன் பெண் விமானி என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
  • இரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட (Russia origin) இந்தப் போர் விமானத்தை ஜாம்நகர் விமான தளத்திலிருந்து இவர் இயக்கினார்.
  • இந்தப் பயணம் அரை மணி நேரம் நீடித்தது.
  • முதன் முதலாக பெண் விமானி தனியாக இயக்கியதன் மூலமாக, போர் விமானிகளின் பயிற்சியில் இது ஒரு மைல்கல் சாதனையாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் பெண் மேம்பாட்டிற்கு IAF அளிக்கும் அர்ப்பணிப்பு உணர்வு வெளிப்படுகிறது.
  • இந்திய விமானப் படையானது சோதனை அடிப்படையில் (experimental basis) பெண் விமானிகளைப் போர் விமானங்களில் ஈடுபடுத்த 5 ஆண்டுகால அளவிற்கு ஒப்புதல் அளித்ததன் வாயிலாக, ஜூன் 2016 அன்று அவனி சதுர்வேதி, பாவனா காந்த், மோகனா சிங் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • பாகிஸ்தான் 26 பெண் போர் விமானிகளைக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் விமானப்படை 2006லிருந்து பெண்களை போர் விமானங்களில் ஈடுபடுத்தி வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்