MiG-21 போர் விமானத்தைத் தனியாக இயக்கிய முதல் பெண் விமானி
February 23 , 2018 2469 days 713 0
அவனி சதுர்வேதி எனும் பெண் விமானி இந்திய விமானப் படைக்குச் (Indian Airforce - IAF) சொந்தமான “மிக்-21“ பைசர் ரக போர் விமானத்தை தனியாக இயக்கிய முதன் பெண் விமானி என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
இரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட (Russia origin) இந்தப் போர் விமானத்தை ஜாம்நகர் விமான தளத்திலிருந்து இவர் இயக்கினார்.
இந்தப் பயணம் அரை மணி நேரம் நீடித்தது.
முதன் முதலாக பெண் விமானி தனியாக இயக்கியதன் மூலமாக, போர் விமானிகளின் பயிற்சியில் இது ஒரு மைல்கல் சாதனையாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் பெண் மேம்பாட்டிற்கு IAF அளிக்கும் அர்ப்பணிப்பு உணர்வு வெளிப்படுகிறது.
இந்திய விமானப் படையானது சோதனை அடிப்படையில் (experimental basis) பெண் விமானிகளைப் போர் விமானங்களில் ஈடுபடுத்த 5 ஆண்டுகால அளவிற்கு ஒப்புதல் அளித்ததன் வாயிலாக, ஜூன் 2016 அன்று அவனி சதுர்வேதி, பாவனா காந்த், மோகனா சிங் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பாகிஸ்தான் 26 பெண் போர் விமானிகளைக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் விமானப்படை 2006லிருந்து பெண்களை போர் விமானங்களில் ஈடுபடுத்தி வருகிறது.