TNPSC Thervupettagam
March 16 , 2018 2445 days 832 0
  • கடலில் நடைபெறும் முதல் பன்னாட்டு கூட்டுப்போர் பயிற்சியான  “MILES 18”    என்ற கூட்டுப்போர் பயிற்சி அந்தமான் கடலில் நடைபெற்றது.
  • ஆஸ்திரேலியா, வங்காளதேசம், இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், இலங்கை, மற்றும் தாய்லாந்து ஆகிய 8 நாடுகளைச் சேர்ந்த 11 கடற்படைக் கப்பல்களும் இந்திய கடற்படையின் 9 கப்பல்களும் MILES-18 கூட்டுப்பயிற்சியில் பங்குபெற்றன.
  • மிலன் 2018 (MILAN 2018) கூட்டுப் பயிற்சியினுடைய பத்தாவது பதிப்பின் ஒரு பகுதியாக இந்த மூன்று நாள் MILES-18 கூட்டுப்பயிற்சி நடத்தப்பட்டுள்ளது.
  • முக்கிய கடல் வழித்தடங்களில் (Critical Sea Lanes) சட்ட விரோத நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கும், கூட்டுப்பயிற்சியில் பங்குபெற்ற  நாடுகளிடையேயான பிராந்திய ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் அந்தமான் நிக்கோபார் கடற்படைப் பிரிவால் நடத்தப்பட்ட இந்த பன்னாட்டு மெகா கடற் கூட்டுப்பயிற்சியின் முக்கிய கருத்துரு “கடல்களைத் தாண்டிய நட்புறவு ” (Friendship across seas) என்பதாகும்.
  • மிலன் (MILAN) கூட்டுப் பயிற்சியானது 5 நாடுகளின் பங்கேற்போடு முதலில் 1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • அந்தமான் மற்றும் நிகோபார் கடற்படைப் பிரிவின் கீழ் இந்திய கடற்படையால் இரு ஆண்டிற்கு ஒரு முறை இந்த கூட்டுப்பயிற்சி நடத்தப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்