TNPSC Thervupettagam
March 21 , 2023 615 days 368 0
  • "பாலின இடைவெளி குறித்த கவனம்" என்ற தலைப்பிலான ஒரு அறிக்கையானது சமீபத்தில் CFA என்ற நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது.
  • இந்தியாவில் நிதி மற்றும் அது சார்ந்தத் துறைகளில் பெண்களின் பங்களிப்பு விகிதம் குறைவாக உள்ளது.
  • இந்த நிறுவனத்தின் மாதிரியில் இடம் பெற்றுள்ள நிறுவனங்களில் பதிவான சராசரிப் பெண்கள் பங்கேற்பு விகிதம் 12.7% ஆகும்.
  • பல்வேறு துறைகளில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் 30 சதவீதம் என்ற அளவில் அதிகப் பெண்கள் பங்கேற்பு விகிதங்கள் பதிவாகியுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து நிதிச் சேவைகள் துறை (22.4%) உள்ளது.  
  • முக்கிய நிர்வாகப் பதவிகளில் 15.9 சதவீத பெண்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர்.
  • இதில் பெண்கள் மற்றும் ஆண்களின் விகிதம் 0.97 ஆக உள்ளது.
  • முக்கிய நிர்வாகப் பணியாளர் பதவிகளில் இது 0.52 ஆகவும், இயக்குநர் பதவிகளில் 0.64 ஆகவும் இது குறைகிறது.
  • 69% நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களில் பெண் பணியாளர்களைக் கொண்டிருக்க வில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்