"பாலின இடைவெளி குறித்த கவனம்" என்ற தலைப்பிலான ஒரு அறிக்கையானது சமீபத்தில் CFA என்ற நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது.
இந்தியாவில் நிதி மற்றும் அது சார்ந்தத் துறைகளில் பெண்களின் பங்களிப்பு விகிதம் குறைவாக உள்ளது.
இந்த நிறுவனத்தின் மாதிரியில் இடம் பெற்றுள்ள நிறுவனங்களில் பதிவான சராசரிப் பெண்கள் பங்கேற்பு விகிதம் 12.7% ஆகும்.
பல்வேறு துறைகளில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் 30 சதவீதம் என்ற அளவில் அதிகப் பெண்கள் பங்கேற்பு விகிதங்கள் பதிவாகியுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து நிதிச் சேவைகள் துறை (22.4%) உள்ளது.
முக்கிய நிர்வாகப் பதவிகளில் 15.9 சதவீத பெண்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர்.
இதில் பெண்கள் மற்றும் ஆண்களின் விகிதம் 0.97 ஆக உள்ளது.
முக்கிய நிர்வாகப் பணியாளர் பதவிகளில் இது 0.52 ஆகவும், இயக்குநர் பதவிகளில் 0.64 ஆகவும் இது குறைகிறது.
69% நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களில் பெண் பணியாளர்களைக் கொண்டிருக்க வில்லை.