சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் (MoRTH) ஆனது சமீபத்தில் 2024-25 வருடாந்திர அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
2022 ஆம் நிதியாண்டில் 30,000 கோடி ரூபாய்க்கு மேலான இழப்புடன், நாடு முழுவதும் உள்ள மாநில சாலைப் போக்குவரத்து நிறுவனங்களின் (SRTUs) நிதி நிலைமை ஆனது மோசமடைந்து வருகிறது.
இது மூன்று ஆண்டுகளில் பதிவான இழப்புகளில் சுமார் 68 சதவீதம் அதிகரிப்பைக் குறிக்கிறது.
2021 ஆம் நிதியாண்டில், 58 SRTU நிறுவனங்களில் பதிவான மொத்த இழப்பு 29,000 கோடி ரூபாய்க்கு மேலாகும்.
2021, 2020 மற்றும் 2019 ஆகிய நிதியாண்டுகளில் வாகனப் பயன்பாட்டு விகிதம் ஆனது முறையே 62.54 சதவீதம், 87.56 சதவீதம் மற்றும் 88.6 சதவீதமாக இருந்தது.
2020 ஆம் நிதியாண்டில் போக்குவரத்து கட்டமைப்புப் பயன்பாட்டு விகிதம் ஆனது 74.03 சதவீதமாக இருந்ததோடு இது 2022 ஆம் நிதியாண்டில் 68.49 சதவீதமாகக் கணிசமாகக் குறைக்கப்பட்டது.
நகர்ப்புறச் செயல்பாடுகளுக்காக என்று மட்டும் அறிமுகப்படுத்தப்பட்ட மொத்தம் 97,165 நகரங்களுக்கு இடையேயான பேருந்துகள் மற்றும் சுமார் 48,325 பேருந்துகளில், முறையே சுமார் 356 மற்றும் 10,517 பேருந்துகள் மட்டுமே "மிகவும் முழுமையாக சக்கர நாற்காலி பயன்படுத்தக் கூடிய வகையிலானதாக" மாற்றப்பட்டுள்ளன.
நகரங்களுக்கு இடையேயான மற்றும் நகர்ப்புறச் செயல்பாடுகளுக்கான அணுகக் கூடிய வகையிலான பேருந்துகளின் எண்ணிக்கை (சக்கர நாற்காலி அணுகல் எதுவும் இல்லாமல்) முறையே 24,860 மற்றும் 15,308 ஆகும்.