நிதி ஆயோக் இந்தியாவில் எதிர்கால போக்குவரத்து விவகாரங்களுக்காக எண்ணங்களைத் திரட்டும் வகையில் “Move Hack” என்ற Global Mobility Hackathon எனப்படும் கருத்தரங்கை ஆரம்பித்துள்ளது.
உலகில் இது முதன் முறையாக
பொதுப் போக்குவரத்து
தனியார் போக்குவரத்து
சாலைப் பாதுகாப்பு
பலநிலை இணைப்பு மற்றும்
புதிய தலைமுறை போக்குவரத்து தொழில்நுட்பங்கள் (பூஜ்ய உமிழ்வு வாகனங்கள் மற்றும் நகரத்திற்குள்ளேயான வான்வழிப் போக்குவரத்து) ஆகிய அனைத்தையும் அரசால் நடத்தப்படும் கருத்தரங்கத்தோடு ஒருங்கிணைக்க எண்ணுகின்றது.
இந்த கருத்தரங்கம் இருமுனை பரப்புரை அணுகுமுறையை கொண்டுள்ளது. அவையாவன
Just Code It (தொழில்நுட்பம், உற்பத்தி, மென்பொருள், தகவல் ஆய்வு ஆகியவற்றில் புதுமைகள் ஏற்படுத்துவதன் மூலம்)
Just Solve It (புதுமையான வர்த்தக எண்ணங்கள் அல்லது நீடித்த தீர்வுகள்)
இந்த கருத்தரங்கம் சிங்கப்பூர் அரசின் ஒத்துழைப்போடு Hacker Earth என்ற நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.
PWC என்ற நிறுவனம் அறிவுசார் பங்குதாரர் ஆகும். NASSCOM என்ற நிறுவனம் யுக்திசார் பங்குதாரர் ஆகும்.