TNPSC Thervupettagam
April 30 , 2021 1215 days 559 0
  • நாசாவின் 2020 ஆம் ஆண்டுத் திட்டமான செவ்வாய்க் கிரகத்திற்கான பெர்சீவரன்ஸ் என்ற  விண்கலனானது (Rover) சமீபத்தில் கார்பன் டை ஆக்சைடை ஆக்சிஜனாக மாற்றியது.
  • மற்றொரு கோளில் இவ்வாறு செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.
  • இந்த விண்கலனின் முன்பகுதியில் பொருத்தப்பட்ட MOXIE (Mars Oxygen In-Situ Resource Utilization Experiments) எனும் கருவியினால் இச்சாதனை மேற்கொள்ளப்பட்டது.
  • MOXIE என்பதுஇயந்திர மரம்” (Mechanical Tree) எனவும் அழைக்கப் படுகிறது.
  • கார்பன் மூலக்கூறுகளை கார்பன் மற்றும் ஆக்சிஜன் மூலக்கூறுகளாக பிரிக்க இக்கருவி மின்சாரம் மற்றும் வேதியியலைப் பயன்படுத்துவதால் இதற்கு இவ்வாறு பெயரிடப் பட்டுள்ளது.
  • இது கார்பன் மோனாக்சைடை ஒரு துணைப் பொருளாகத் தருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்