ஆயுதங்கள் இல்லாத இரண்டு MQ-9B ட்ரோன்களை (ஆளில்லா விமானம்) ஒரு வருடத்திற்கு இந்தியக் கடற்படையானது அமெரிக்காவிடமிருந்து குத்தகைக்கு எடுத்து உள்ளது.
இது இந்திய கடற்படையின் முதல் குத்தகை ஆகும்.
2020 ஆம் ஆண்டின் பாதுகாப்பு கையகப்படுத்துதல் நடைமுறை (Defence Acquisition Procedure) என்ற முறையானது இராணுவத் தளவாடங்களைக் குத்தகைக்கு எடுப்பதற்கான ஒரு வசதியை அறிமுகப் படுத்தியது.