mRNA தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி H5N1 தடுப்பூசிகள்
August 5 , 2024 110 days 135 0
உலக சுகாதார அமைப்பு (WHO) ஆனது அதிநவீன தூது RNA தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மனிதப் பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்றுகளுக்கான தடுப்பூசிகளை உருவாக்குவதற்கான புதிய திட்டத்தினை அறிவித்துள்ளது.
அர்ஜென்டினாவின் சினெர்ஜியம் பயோடெக் நிறுவனமானது இந்த முன்னெடுப்பினை மேற்கொள்ள உள்ளது என்பதோடு அது ஏற்கனவே H5N1 தடுப்பூசிகளை உருவாக்கத் தொடங்கி யுள்ளது.
பறவைக் காய்ச்சல் H5N1 ஆனது முதன்முதலில் 1996 ஆம் ஆண்டில் தோன்றியது, ஆனால் 2020 ஆம் ஆண்டு முதல் பறவைகள் மத்தியில் பாதிப்புகள் அதிக வேகமாகப் பரவியதுடன் பாலூட்டிகள் மற்றும் சில மனிதர்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
இந்த வைரஸ் எதிர்காலத்தில் ஒரு பெருந்தொற்றினை ஏற்படுத்தும் என்ற அச்சத்தைத் தூண்டியுள்ளது.