TNPSC Thervupettagam

mRNA புற்றுநோய் தடுப்பூசி – ரஷ்யா

December 27 , 2024 26 days 80 0
  • ரஷ்ய நாடானது, புற்றுநோய்க்கு எதிராக mRNA தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.
  • இந்த தடுப்பூசியானது 2025 ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்தத் தடுப்பூசிகள் புற்றுநோய் செல்களை அடையாளம் கண்டு தாக்குவதற்காக, நோயெதிர்ப்பு மண்டலத்தை நன்கு தூண்டுவிப்பதன் மூலம் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகின்றன.
  • mRNA வகையான தடுப்பூசிகள் தூது ஆர்என்ஏவின் ஒரு பகுதியை உடலினுள் அறிமுகப் படுத்துவதன் மூலம் செயல்படுகின்றன என்பதோடு இது ஒரு குறிப்பிட்ட புரதத்தை உற்பத்தி செய்ய செல்களைத் தூண்டுகிறது.
  • ரஷ்யாவில் புற்றுநோய் பாதிப்பு விகிதம் படிப்படியாக அதிகரித்து வருவதோடு, 2022 ஆம் ஆண்டில் 635,000 புதிய புற்றுநோய்ப் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
  • பெருங்குடல், மார்பகம் மற்றும் நுரையீரல் புற்றுநோய்கள் அந்த நாட்டில் மிகவும் பெரும்பான்மையாக பதிவாகும் புற்றுநோய்ப் பாதிப்புகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்