TNPSC Thervupettagam

mRNA நுரையீரல் புற்றுநோய் தடுப்பூசி

August 31 , 2024 84 days 128 0
  • ஐக்கியப் பேரரசு, அமெரிக்கா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட ஏழு நாடுகளில் 34 தளங்களில் BNT116 தடுப்பூசிக்கான முதல் கட்ட சோதனை நடைபெற்று வருகிறது.
  • இது உலகின் முதல் mRNA அடிப்படையிலான நுரையீரல் புற்றுநோய் தடுப்பூசி ஆகும். இது பயோன்டெக் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.
  • BNT116 தடுப்பூசி, நோயெதிர்ப்பு மண்டலமானது ஒருவகை நுரையீரல் புற்றுநோய் கட்டிகளை அடையாளம் காட்டும் குறிப்பான்களை குறி வைத்து ஆரோக்கியமான செல்களை விட்டு புற்றுநோய் செல்களைத் தாக்கச் செய்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஆண்டுதோறும் சுமார் 1.8 மில்லியன் உயிரிழப்புகள் பதிவாகின்றதால், நுரையீரல் புற்றுநோயானது உலகளவில் புற்றுநோய் சார்ந்த உயிரிழிப்புகளுக்கு முதன்மையான காரணமாக உள்ளது.
  • mRNA (தூது RNA) என்பது செல்களை அதன் இயற்கையான கட்டமைப்புகளைப் பயன்படுத்தி ஒரு புரதத்தை உருவாக்க வழிகாட்டும் சில வழிமுறைகள் அல்லது ஒரு செய்முறையைக் கொண்டுள்ள ஒரு மூலக்கூறு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்